உடனடியாக வெளியேறுங்கள்... நாட்டு மக்களை வலியுறுத்திய அமெரிக்கா
பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு சவால்களை குறிப்பிட்டு ஹைட்டியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் குடிமக்களை கூடிய விரைவில் வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.
வன்முறை சம்பவங்கள்
ஹைட்டியில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் ஆயிரக்கணக்கான மக்ககளை இடம்பெயர வைத்துள்ளது. மட்டுமின்றி கொலை சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையிலேயே அமெரிக்க குடிமக்கள் வணிக அல்லது தனியார் போக்குவரத்தை பயன்படுத்தி கூடிய விரைவில் ஹைட்டியை விட்டு வெளியேற வேண்டும் என அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
@reuters
மனிதாபிமான உதவி
ஹைட்டியில் அதிகரித்து வரும் குழு சண்டைகள் பேரழிவு தரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் சுமார் 200,000 மக்களை இடம்பெயர செய்துள்ளது.
மட்டுமின்றி மொத்த மக்கள் தொகையில் சுமார் 5.2 மில்லியன் மக்களை மனிதாபிமான உதவி கோரும் நிலைக்கு தள்ளியுள்ளது. ஆகஸ்டு மாத துவக்கத்தில் ஹைட்டி தலைநகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகாமையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |