அமெரிக்காவை வாட்டும் இரட்டை பேரிடர்கள்: பனிப்பொழிவில் 10 பேர் பலி
அமெரிக்காவை காட்டுத்தீ கடுமையாக உலுக்கி வரும் நிலையில், தற்போது பனிப்பொழிவும் புதிய சிக்கல்களை கொண்டு வந்துள்ளது.
கலிபோர்னியா காட்டுத்தீ
கலிபோர்னியாவில் காட்டுத் தீ கடந்த சில வாரங்களாக கடுமையான காற்று வீச்சால் வேகமாகப் பரவி வருகிறது.
தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடி வந்தாலும், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் எதிர்கொண்டு வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே, "ஹியூஸ் தீ”(Hughes Fire,) என்று அழைக்கப்படும் வேகமாகப் பரவும் காட்டுத் தீ காரணமாக 30,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தும் பனிப்பொழிவு
இதேவேளை, புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா போன்ற தெற்கு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக புளோரிடாவின் மில்டன் நகரத்தில் 23 செ.மீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பனிக்கட்டியால் மூடப்பட்டு துருவப் பிரதேசத்தைப் போல காட்சியளிக்கிறது.
இங்கு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
-20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 10 உயிரிழந்துள்ளனர். 2000 விமானங்கள் ரத்தாகியுள்ளன.
இந்த கடுமையான வானிலை மாற்றத்தால், அமெரிக்காவின் பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |