சீனாவின் வரி ஏய்ப்பிற்கு உதவிய 40 நாடுகள் பட்டியலில் இந்தியா - அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை
US names India in China tariff evasion scam: அமெரிக்கா வெளியிட்ட “Great Transshipment Scam” அறிக்கையில் இந்தியாவின் பெயர் உள்ளது.
சீனாவின் வரி ஏய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட “Great Transshipment Scam” என்ற அறிக்கையில், சீனாவின் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதாக 40-க்கும் மேற்பட்ட நாடுகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
இதில் இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், தைவான், மெக்சிகோ, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளும் அடங்குகின்றன.

அறிக்கையில், சீனா தனது பொருட்களை நேரடியாக அமெரிக்காவுக்கு அனுப்பாமல், மூன்றாம் நாடுகளின் வழியாக சிறிய மாற்றங்கள் செய்து (புதிய லேபிள், மறுபொதி, மறுவிலைப்பட்டியல்) அனுப்புவதன் மூலம், வேறு நாட்டில் தயாரிக்கப்பட்டது போல காட்டி, அதிக வரிகளை தவிர்த்ததாக கூறப்பட்டுள்ளது.
2018-இல் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு எதிராக Section 301 வரிகளை விதித்த பிறகு, இந்த “illegal transshipment” அதிகரித்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
சீனாவின் பொருட்கள் இந்தியாவின் புனே-குஜராத்-சென்னை உற்பத்தி வளையத்தில் பம்புகள், கம்ப்ரசர்கள் போன்ற தொழில்துறை பொருட்களாக மாறி, அமெரிக்காவின் சின்சினாட்டி, டெய்டன், கொலம்பஸ் போன்ற நகரங்களில் உள்ள தொழில்துறை சங்கிலிகளை பாதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
303 பில்லியன் அமெரிக்க டொலர்
அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, இவ்வாறு சட்டவிரோதமாக அனுப்பப்படும் பொருட்களின் ஆண்டு மதிப்பு 40 பில்லியன் முதல் 303 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இருக்கலாம்.
இதை கண்டறிய, அமெரிக்க சுங்கத்துறையுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான “detective border” அமைப்பை உருவாக்கி வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.
இந்த நடவடிக்கைகள், சீனாவின் பொருட்களை குறைந்த செலவில், சட்டவிரோதமாக அமெரிக்க சந்தையில் புகுத்த உதவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |