ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு
மத்திய கிழக்கில், அமெரிக்கா-ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டு வர புதிய முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஈரான் சமீபத்தில் 14 அம்சங்களைக் கொண்ட சமாதான திட்டத்தை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தை பாகிஸ்தான், அமெரிக்காவிடம் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணியில், அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்க ஒப்புக்கொண்டதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலக்கு, இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஆனால், ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, அனைத்து தடைகளும் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.
அமெரிக்காவின் இந்த தற்காலிக விலக்கு, முந்தைய பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிய புதிய மாற்றமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஈரான் அதிகாரப்பூர்வமாக இதை உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்கா, OFAC (Office of Foreign Assets Control) வழியாக எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக விலக்க முன்வந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானுடன் உள்ள போர்நிறுத்தம் “life support” நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளார். ஈரான், லெபனான் உள்ளிட்ட முழு பிராந்தியத்திலும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#Iran #USA #OilSanctions #NuclearTalks #MiddleEast #StraitOfHormuz #EnergyMarkets #Geopolitics