ரஷ்ய எண்ணெய் மீதான தடையை நீக்க ஜேர்மனியுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
அமெரிக்கா, ஜேர்மனியுடன் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஜேர்மன் அரசு மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து NATO நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று ஜேர்மன் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பிலான முக்கிய விவரங்கள்
ஜேர்மனி தற்போது Druzhba எண்ணெய் குழாய்கள் மூலம் பெலாரஸ் மற்றும் போலந்து வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
PCK சுத்திகரிப்பு நிலையம் (Schwedt) 2023 முதல் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனம் ஜேர்மனியில் உள்ள Rosneft நிறுவனத்தின் பெரும்பங்குகை வாங்க வாய்ப்பு உள்ளது.
ஜேர்மன் அரசியல்வாதியான Dietmar Woidke (Social Democratic Party) ரஷ்ய எண்ணெய் மீண்டும் இறக்குமதிக்காக ஆதரவு தெரிவித்துள்ளார்.
Nord Stream 2 வாயு குழாய் மீண்டும் செயல்படுத்தும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா ஜேர்மனியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.
ஜேர்மனி மற்றும் பல மேற்கு நாடுகள் உக்ரைன் போருக்கு ஆதரவளித்து, ரஷ்ய எண்ணெய் மற்றும் வாயு இறக்குமதியை முடக்கியிருந்தன.
ஆனால், ஜேர்மனியின் எரிசக்தி தேவைகள் மற்றும் அமெரிக்காவின் புதிய கொள்கைகள், இந்த தடை மாற்றப்படுமா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |