பூங்காவில் 7 வயது சிறுமிக்கு கிடைத்த அழகிய வைரம்: பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் அதிர்ஷ்டம்
அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் 7 வயது சிறுமி ஒருவர் 2.95 கேரட் வைரத்தை கண்டுபிடித்துள்ளார்.
7 வயது சிறுமியிடம் சிக்கிய வைரம்
அமெரிக்காவின் ஆர்கன்சாஸில்(Arkansas) செப்டம்பர் 1ம் திகதி ஆஸ்பென் பிரவுன் என்ற 7 வயது சிறுமி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மாநில பூங்காவில் தன் குடும்பத்தினருடன் கூடி இருந்தார்.
அப்போது பூங்காவில் இருந்து பட்டாணி அளவிலான 2.95 காரட் தங்க பழுப்பு நிற வைரத்தை அதிர்ஷ்டவசமாக 7 வயது சிறுமி ஆஸ்பென் பிரவுன் தனது பிறந்தநாள் பரிசாக கண்டுபிடித்தார்.
Arkansas State Parks
இது குறித்த பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறுமி கண்டுபிடித்துள்ள இந்த வைரம் இந்தாண்டில் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய வைரமாகும், மார்ச் மாதத்தில் 3.29 கேரட் பழுப்பு வைரம் தற்போது முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரம் தொடர்பாக பூங்கா உதவி கண்காணிப்பாளர் வேமன் காக்ஸ் தெரிவித்த கருத்தில், 7 வயது சிறுமி ஆஸ்பென் பிரவுன் கண்டுபிடித்துள்ள வைரம் சமீபத்திய ஆண்டுகளில் நான் பார்த்த மிகவும் அழகான வைரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பூங்கா தளத்தில் இருந்து இதுவரை 75,000 வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு பார்வையாளர்கள் பூங்காவில் இருந்து வைரங்களை கண்டுபிடிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |