ரஷ்ய கோடீஸ்வரரின் போயிங் 737 விமானத்தை கைப்பற்ற அமெரிக்காவுக்கு அனுமதி
ரஷ்ய நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தை கைப்பற்ற அமெரிக்காவுக்கு வாரண்ட் கிடைத்துள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மேற்கோள் காட்டி, ரஷ்ய எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான 25 மில்லியன் டொலர் போயிங் 737-ஐ பறிமுதல் செய்ய நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் PJSC Rosneft Oil Co. நிறுவனத்திற்கு சொந்தமானது, இது மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டது மற்றும் தடைவிதிக்கப்பட்ட தொழிலதிபர் Igor Ivanovich Sechin தலைமையில் உள்ளது.
representative Image ANI
2014-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் காணப்படாத இந்த விமானம், ஏற்றுமதி கட்டுப்பாட்டு சீர்திருத்தச் சட்டத்தை மீறியதன் அடிப்படையில் அமெரிக்காவால் கைப்பற்றப்படுவதற்கான சாத்தியமான காரணத்தை நீதிமன்றம் கண்டறிந்து இந்த உத்தரவை அளித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவின் செல்வங்களை குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது.