கிரீன் கார்டு விதிகளில் தளர்வு: மோடியின் அமெரிக்க பயணத்திற்கு முன் வெளியான அறிவிப்பு
அமெரிக்காவின் கிரீன கார்டுக்கு அப்ளை செய்யும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கிரீன் கார்டு விதிகளை தளர்த்திய அமெரிக்கா
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமெரிக்கா அதன் கிரீன் கார்டு விதிகளை தளர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் வேலை செய்வதற்கும், கிரீன் கார்டு அப்ளை செய்ய காத்திருப்பவர்களுக்கும், கிரீன் கார்டு அப்ளை செய்து காத்திருப்பவர்களுக்குமான கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டு விதிகளைத் தளர்த்தியுள்ளது.
வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்திற்கான (Employment Authorization Document-EAD) ஆரம்ப மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கான தகுதி அளவுகோல்கள் தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வழங்கிய வழிகாட்டுதல்கள் மூலம் விசா விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இது கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியிருப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம்
இந்திய பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்கா செல்கிறார்.
Representative Image
ஜூன் 22-ம் திகதி மோடிக்கு அரசு விருந்து அளிக்கப்படுகிறது. அதே நாளில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். மேலும் இந்த பயணத்தில் அவர் பல முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |