அமெரிக்காவின் அதிர்ச்சி முடிவு: உக்ரைனுக்கான ஆயுத உதவி நிறுத்தம்! ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு தொடருமா?
ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கான ஆயுத உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியுள்ளது.
ஆயுத உதவி நிறுத்தம்!
2022 பிப்ரவரி முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர், உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ஆயுத உதவிகளை திடீரென நிறுத்தியுள்ளது.
இது உக்ரைன் போரில் பெரும் திருப்பமாக கருதப்படுகிறது. இருப்பினும், பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வந்தார். ஆனால், தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை படிப்படியாக குறைத்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் காரணமாக, உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு தொடருமா?
அமெரிக்கா கைவிட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
The summit in London was dedicated to Ukraine and our shared European future.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 2, 2025
We feel strong support for Ukraine, for our people – both soldiers and civilians, and our independence. Together, we are working in Europe to establish a solid foundation for cooperation with the… pic.twitter.com/6CiBZ1HhOA
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி மோதலுக்கு பிறகு, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் லண்டனில் அவசர கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு முன்பாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இணைந்து புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்வோம் என தெரிவித்து இருந்தார்.
அத்துடன் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அடங்கிய அமைதிப் படையை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |