அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: தாக்குதல்தாரி அதிரடி கைது
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள கண்ட்ரி கிளப்பில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு காரணமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு
நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள கண்ட்ரி கிளப்பில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்த போது இந்த துப்பாக்கி சூடு அரங்கேறியுள்ளது.
நிகழ்ச்சி நடந்த ஸ்கை மெடோ கன்ட்ரி கிளப்பில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து பலமுறை துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அவசர சேவை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய நபரை உடனடியாக கைது செய்தனர்.
திருமண நிகழ்வின் உணவு விருந்து நடைபெற்று கொண்டிருந்த போது இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |