உக்ரைனுக்கு அதிநவீன இராணுவ ஹெலிகாப்டர்: அமெரிக்காவை எச்சரிக்கும் புடினின் வீடியோ!
ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து போராடுவதற்கு உதவும் விதமாக அமெரிக்கா தங்களது Mi-17 ரக ராணுவ ஹெலிகாப்டரை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான தாக்குதலானது நீண்ட கால போர் நடவடிக்கைகளுக்கு தயாராகி கொண்டு இருக்கும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், உக்ரைனுக்கு உதவும் வகையிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல மேற்கத்திய நாடுகள் தங்களது அதிநவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
மேற்கத்திய நாடுகளின் இத்தகைய ஆயுத உதவிகளுக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு அருகில் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
US military helicopters on their way to Ukraine
— Euromaidan Press (@EuromaidanPress) June 5, 2022
Mi-17 military helicopters for the Ukrainian Armed Forces are being loaded at a US Air Force base - Andriy Yermak, head of the Ukrainian President's Office https://t.co/kJWKlFyfqt pic.twitter.com/Yx60BJ7Q9A
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் நேற்று நாட்டின் அரசு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவியை வழங்கினால், உக்ரைன் மீதான தாக்குதல் பட்டியல் விரிவுப்படுத்தப்படும் என எச்சரித்து இருந்தார்.
இந்தநிலையில், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் முன்னகர்வை கட்டுப்படுத்துவதற்கு உதவும் விதமாக அமெரிக்கா தங்களது Mi-17 ரக ராணுவ ஹெலிகாப்டரை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.
Putin threatens #Ukraine with new strikes if we receive MLRS.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) June 5, 2022
English subtitles pic.twitter.com/tAILocNKau
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யா உள்ளே நுழைய கூடாது...பல்கேரியாவின் முடிவால் அதிர்ந்துபோன புடின் அரசு!
இதுத் தொடர்பாக வெளிவந்துள்ள புகைப்படத்தில், உக்ரைனுக்கான Mi-17 ரக ராணுவ ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ தளத்தில் உள்ள இராணுவ சரக்கு விமானத்தில் ஏற்றுவது தெரிவந்துள்ளது.
மேலும் இதனை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் உறுதிப்படுத்தியுள்ளார்.