உக்ரைன் ராணுவத்திற்கு 300 மில்லியன் டொலருக்கு ஆயுத உதவி செய்யும் நாடு
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா 300 மில்லியன் டொலருக்கு ராணுவ உதவி செய்வதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த 14 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யா உக்ரைன் எல்லைக்குட்பட்ட பல பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது.
@ndtv
இந்நிலையில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைன் போரில், ரஷ்யாவை எதிர்க்கும் வகையில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
@ndtv
ஏற்கனவே பல ராணுவ உதவிகளை செய்திருக்கும் அமெரிக்கா, தற்போது உக்ரைனுக்கு 300 மில்லியன் டொலருக்கு ஆயுத உதவி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ராணுவ உதவி
இதில் ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் ஹோவிட்சர்கள் மற்றும் பீரங்கிகளுக்கான வெடிமருந்துகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.
ரஷ்யா உக்ரைன் மீது தொடுக்கும் பாரிய தாக்குதலுக்கு எதிராக உக்ரைனும் எதிர் தாக்குதல் நடத்த வேண்டுமென, அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
@reuters
மேலும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரைன் ஜென் பியர் ’ கடந்த 5 மாதங்களாக அமெரிக்க உக்ரைன் தொடர் தாக்குதலை நடத்த அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டுள்ளது.’ என கூறியுள்ளார்.
@epa
கடந்த 2022 ஆம் ஆண்டில் போர் துவங்கியதிலிருந்து ரஷ்யா, இதுவரை $35.7 பில்லியன் டொலர் ராணுவ உதவி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.