மத்திய கிழக்கில் குவிக்கப்படும் போர்க்கப்பல்கள், வீரர்கள்: அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்க ராணுவம் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் அதிகரிப்பு
ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தன்னுடைய ராணுவ பலத்தை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
வெளியான தகவல்களின் படி, 3 போர் கப்பல்கள், சுமார் 2200 முதல் 2500 வரையிலான போர் வீரர்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட USS Boxer தாக்குதல் குழு மற்றும் 11வது கடற்படையின் அதிரடிப்படை குழுவை சேர்ந்த வீரர்கள் மத்திய கிழக்கு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புதிதாக அறிவிக்கப்பட்ட படைகள் சேருவதற்கு முன்னதாகவே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே 50,000 அமெரிக்க வீரர்கள் பணியில் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறுவதாகவும், இது விரைவில் முடிவடையும் என்றும் வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |