உக்ரைனில் உளவுபார்த்த அமெரிக்கருக்கு குடியுரிமை வழங்கிய ரஷ்யா
உக்ரைனில் ரஷ்யாவிற்காக உளவுத் தகவல்கள் வழங்கிய அமெரிக்கர் ரஷ்யப் பாஸ்போர்ட் பெற்றார்.
டேனியல் மார்டின்டேல் என்ற அமெரிக்கப் பிரஜை, உக்ரைனில் ரஷ்யா பக்கமாக செயல்பட்டு ரஷ்ய இராணுவத்திற்கு உளவுத் தகவல்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அவர் தற்போது மாஸ்கோவில், ரஷ்யப் குடியுரிமை பெற்றுள்ளார். அவருக்கு ரஷ்ய பாஸ்போர்ட் பாஸ்போர்ட் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மார்டின்டேல், 2018-ஆம் ஆண்டு வ்லாடிவோஸ்டோகில் இருந்தபோது ரஷ்ய மொழியைக் கற்றதுடன், அப்போது உருவான நெருக்கம் தான் இன்று “இந்த நாடு என் குடும்பம்” என்ற உணர்வை ஏற்படுத்தியதாக கூறினார்.
உலகமெங்கும் ரஷ்யா பக்கம் நின்ற சில வெளிநாட்டு ஆதரவாளர்களில் முக்கியமானவர் இவர்.
2022-ஆம் ஆண்டு, ரஷ்யா உக்ரைனில் முழுமையான போரைத் தொடங்கும் முன், மார்டின்டேல் போலந்திலிருந்து உக்ரைனின் ல்விவ் நகருக்குள் சைக்கிளில் பயணம் செய்து நுழைந்தார். பின்னர், டோனெஸ்க் பகுதியில் வசித்து வந்தார்.
இரண்டு ஆண்டுகளாக, ரஷ்யப் படைகள் இவரிடம் இருந்து உக்ரைனின் இராணுவத் தகவல்களை பெற்றிருந்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ந்தத் தகவல்கள், குராகோவே நகரை கைப்பற்றுவதற்கான திட்டமிடலுக்கே பங்களித்ததாக தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவிற்காக செயல்பட்டதற்காக, டோனெஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவாளர் டெனிஸ் புஷிலின், மார்டின்டேலை "நமக்கு உளவாக உள்ளவர்" என பாராட்டினார்.
ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் மார்டின்டேல், "நான் இது வரை ரஷ்ய வீரர்களின் உயிர்களை காக்க முயன்றேன்" என உருக்கமாக தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |