அமெரிக்கா - ஈரான் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை: முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை
அமெரிக்கா - ஈரான் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை ஆனது பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை நடவடிக்கை காரணமாக அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து தடைபட்டு வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை ஈரானிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க உயர்மட்ட குழு சனிக்கிழமை பாகிஸ்தான் செல்ல உள்ளது.

இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை பேசிய வெள்ளை மாளிகை செய்தி ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட், ஈரான் அதிகாரிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு தூதர ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் நாளை பாகிஸ்தான் செல்ல இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது ஈரானின் நேரடி பேச்சுவார்த்தை அழைப்பை தொடர்ந்து நடைபெறுகிறது.
முன்னதாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஈரானிய குழு விருப்பம் தெரிவித்துள்ளது.
துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் கலந்து கொள்ளவில்லை

முதல் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.
அதைப்போல, ஈரானிய தரப்பில் ஈரானிய குழுவின் முன்னாள் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் கலந்து கொள்ள போவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |