அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு கிடைக்கும் 15 பில்லியன் டொலர் நன்மை
அமெரிக்கா-ஈரான் இடையிலான 107 நாள் போருக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
இந்த போரில் 10,000 பேர் உயிரிழந்தனர். ஈரானுக்கு மட்டும் 145 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஹார்முஸ் நீரினை மீண்டும் திறக்கப்படுகிறது. உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த வழியாகச் செல்லும் நிலையில், இதனால் Brent crude விலை 83.17 டொலராக குறைந்தது, WTI 80.75 டொலராக சரிந்தது.

இந்தியாவிற்கு இது பெரிய நன்மையை அளிக்கும். குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம், 15 பில்லியன் டொலர் வரை சேமிப்பு கிடைக்கும். இதனால், Current Account Deficit குறையும், ரூபாயின் மீது அழுத்தம் குறையும்.
போருக்கு முன், இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவையில் 40 சதவீத எண்ணெய் மற்றும் 70 முதல் 90 சதவீத எரிவாயுவையும் ஹார்முஸ் வழியாகக் கொண்டுவந்தது. இப்போது அந்த பாதை மீண்டும் திறக்கப்படுவதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதியாகிறது.
மேலும், அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா மீண்டும் ஈரானிலிருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதத்தில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 44,000 மெட்ரிக் டன் எண்ணெய் வாங்கியுள்ளன.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன்
இந்த ஒப்பந்தம், இந்தியாவின் சபஹார் துறைமுகம் மற்றும் North-South Transport Corridor (INSTC) திட்டத்திற்கும் புதிய உயிர் ஊட்டுகிறது. 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள சபஹார் திட்டம் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2027க்குள் முழுமையாக செயல்படும் வாய்ப்பு உள்ளது. INSTC மூலம், இந்தியா-ரஷ்யா இடையிலான கப்பல் போக்குவரத்து நேரம் 40 சதவீதம் குறையும், செலவும் 1,000 டொலர் வரை குறையும்.
ஆனால், இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டம் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்பதால், இந்த அமைதி நிலைத்திருக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |