ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை ரத்து; அமைதிக்கு முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக கருதப்படுகிறது.
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை ரத்து
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 14 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கையெழுத்திட்டனர். அதற்கு மத்தியஸ்தராக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இதை தொடர்ந்து, இன்று சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் பகுதியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வரும் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இந்த பேச்சுவார்த்தைக்காக இன்று சுவிட்சர்லாந்து புறப்படவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், "இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஏற்பாடுகள் ஒருபோதும் எளிமையானவையாகவோ அல்லது கணிக்கக்கூடியவையாகவோ இருந்ததில்லை" என தெரிவித்துள்ளது.
முன்னதா,க இதில் மத்தியஸ்தராக உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் சுவிட்சர்லாந்திற்கு மேற்கொள்ளவிருந்த தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, "அமெரிக்கா, ஈரான், கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன" என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இதன் காரணமாகவே சுவிட்சர்லாந்திற்குத் தனது தூதுக்குழுவை அனுப்புவதை ஈரான் தாமதப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஈரானின் சார்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் எம்பி கலிபாஃப், "எதிர்த்தரப்பினர் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டாலோ, ஒப்பந்தத்தை மீறினாலோ,வரம்பு மீறிய கோரிக்கைகளை வைத்தாலோ, எதிரிக்கு கடுமையான பதிலடியைக் கொடுக்க நாங்கள் சிறிதும் தயங்க மாட்டோம்" என எச்சரித்துள்ளார்.
گوشبفرمانیم، وظیفهٔ محولشده به ما توسط مقام معظم رهبری پیگیری تحقق شروط و بندهای تفاهم است.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) June 18, 2026
در صورت بدعهدی، پیمانشکنی و زیادهخواهی طرف مقابل هیچ تردیدی در پاسخ کوبنده به دشمن نداریم.
یکبار در جنگ سیلی خوردند، اگر بخواهند دوباره همان مسیر را بروند سیلی محکمتری خواهند خورد.
லெபனான் மீதான இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |