ஈரான் மோதல்- ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்கா திட்டம்
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணை முடக்கத்தை உடைக்க அமெரிக்கா ஒரு மாஸ்டர் பிளானை தயாரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வழிகளை அமெரிக்க இராணுவம் ஆலோசனை செய்து வருவதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர் கப்பல்களை மீண்டும் நகரவைப்பதற்கான திட்டங்களை இராணுவம் தயாரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இது எப்போது தொடங்கும்ம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.
ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் சர்வதசே கச்சா எண்ணெய் விலை இன்று ஒரே நாளில் 10 சதவீதம் உயர்வடைந்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பான பல தகவல்களை கீழ் வரும் காணொளியில் பார்க்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |