ஜெலென்ஸ்கி-ஜோ பைடன் சந்திப்பு: ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு புதிய உதவி தொகுப்பு
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான இன்றைய சந்திப்பை தொடர்ந்து உக்ரைனுக்கான புதிய உதவி தொகுப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி-ஜோ பைடன் சந்திப்பு
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை இடைவிடாமல் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்த பிறகு, உக்ரைனுக்கு புதிய உதவி தொகுப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவி தொகுப்பு
அப்போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்யா மட்டும் தனித்து நிற்பதாக குறிப்பிட்டார், அத்துடன் ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற ரஷ்ய அதிபர் புடின் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் தற்போதைய உதவி தொகுப்பில் உக்ரைனின் வான் பாதுகாப்பு துறைக்கு தேவையான உதவிகளை முக்கியப்படுத்தியுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புக்கு தேவையான வெடிமருந்துகள் சுமார் 325 மில்லியன் டொலர் மதிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் டாங்கிகளை அனுப்பவும், HIMARS-க்கு தேவையான வெடிமருந்துகள், கிளஸ்டர் வெடிப்பொருள்கள், தொட்டி எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பனிக்காலத்தில் அமெரிக்கா மேலும் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த ஊக்கப்படுத்தும் என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |