மாதவிடாய் எனக்கூறி உறவுக்கு மறுத்த காதலி! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக் கொன்ற காதலன்
உடலுறவுக்கு மறுத்ததால் காதலி மற்றும் அவளது குடும்பத்தை துப்பாக்கியால் சுட்டு காதலன் கொலை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் இறப்பிற்கு பின் மலர்ந்த காதல்
அமெரிக்காவில் கேட் காஸ்டன் என்ற பெண் தனது காதல் கணவன் கோரி கடந்த 2017ம் வருடம் புற்று நோயால் உயிரிழந்த பிறகு, மகன் ஜொனாதன்(10) மகள் சோய்(8) ஆகியோருடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
கணவர் கோரி புற்றுநோயால் இறக்கும் போது, மனைவி கேட் காஸ்டனிடம் புதிய வாழ்க்கை தொடங்கு மாறும், வாழ்வு மிக சிறியது அதை அழகாக மாற்றிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
FACEBOOK
கணவனின் விருப்பத்திற்கு ஏற்ப, 37 வயதான கேட், தனக்கான மற்றும் தன்னுடைய குழந்தைகளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள கூடிய சிறந்த மனிதருக்காக காத்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது கச்சேரி ஒன்றில் லாரி டிரைவர் ரிச்சர்ட் டேரன் எமெரி என்பவரை கேட் காஸ்டன் சந்தித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இருவருக்கும் காதல் மலரவே, ரிச்சர்ட் டேரன், கேட் காஸ்டன் மற்றும் அவரது குழந்தைகள், தாய் ஆகியோருடன் செயின்ட் சார்லஸ், மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸ் புறநகர்ப் பகுதி உள்ள அவரது வீட்டிற்கு குடியேறினார்.
YOUTUBE
லாரி ஓட்டுநர் ரிச்சர்ட் டேரனுக்கம் முன்னாள் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தையே கொன்ற காதலன்
ஒன்றரை ஆண்டுகளாக ரிச்சர்ட் டேரன் மற்றும் கேட் காஸ்டன் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
காதலி கேட் காஸ்டன் கோபத்தில் ரிச்சர்ட் டேரனை தாக்கவே ஆத்திரமடைந்த அவர், துப்பாக்கியால் கேட் காஸ்டனை தலை மற்றும் தோள் பகுதியில் சுட்டுள்ளார்.
அத்துடன் பக்கத்து அறையில் இருந்த கேட் காஸ்டனின் தாய், மற்றும் குழந்தைகள் பயத்தில் அலறிக்கொண்டே 911 அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்டு இருந்த நிலையில், அவர்களையும் ரிச்சர்ட் டேரன் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
YOUTUBE
911 அழைப்பில் கேட்ட துப்பாக்கி சப்தங்களையும், அலறல் சப்தங்களையும் கேட்டு அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அங்கு கேட் அவரது குழந்தைகள் ஜொனாதன், சோய் மற்றும் கேட்டின் தாய் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து லொறியில் தப்பி சென்ற ரிச்சர்ட்-டை மடக்கி பிடித்து பொலிஸார், அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும் சிறையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது காதலி தனக்கு மாதவிடாய் சுழற்சி இருப்பதாக தெரிவித்து உடலுறவுக்கு மறுத்ததாகவும், அந்த வாக்குவாதத்தின் போது அவள் தன்னை தாக்கியதாகவும், இதனால் ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் ரிச்சர்ட் வாக்குமூலம் அளித்துள்ளார்.