அமெரிக்காவிற்கு பின்னடைவு., புறப்படும்போது வெடித்துச்சிதறிய மலேசிய போர் விமானம்
மலேசியாவில் அமெரிக்க தயாரிப்பு போர் விமானமொன்று புறப்படும்போது வெடித்துச்சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் குவான்டான் நகரில் (Kuantan) உள்ள சுல்தான் அஹமத் ஷா விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
மலேசிய விமானப்படையின் (RMAF) F/A-18D Hornet போர் விமானம் take-off ஆகும் தருணத்தில் தீப்பிடித்து வெடித்தது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்த F/A-18D Hornet போர் விமானம் அமெரிக்காவின் MCDonnell Douglas நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் விமானி உயிர்தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மேலும், உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை உறுதிப்படுத்திய மலேசிய விமானப்படை, விபத்துக்கான காரணங்களை ஆராய விசாரணையை தொடங்கியுள்ளது.
F/A-18D Hornet என்பது பல்வேறு இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த போர்விமானமாகும். ஆனால், இச்சம்பவம் அதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
மலேசியா சமீப காலங்களில் தனது விமானப்படையை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளது. அதற்காக புதிய விமானங்களை வாங்கும் திட்டங்களில், ரஷ்யாவின் Su-57 Felon மற்றும் தென் கொரியாவின் KF-21 Boramae ஆகிய விமானங்கள் பரிசீலனையில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Malaysia fighter jet crash, F/A-18 Hornet explosion, Kuantan airport jet fire, RMAF jet accident 2025, Hornet crash video viral, Sultan Ahmad Shah Airport incident, Malaysian Air Force investigation