அவருக்காக அதை செய்ய கூட தயாராக இருக்கிறேன்! 47 வயதான ஆசிரியரை வெறித்தனமாக காதலிக்கும் 19 வயது மாணவி... ஆச்சரிய பின்னணி
அமெரிக்காவை சேர்ந்த 47 வயதான ஆணும், பெல்ஜியமை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் தங்கள் அதிக வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் உயிருக்கு உயிராக காதலித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Vermont-ஐ சேர்ந்தவர் Jeremy Pratico (47). பெல்ஜியத்தின் Brusselsஐ சேர்ந்தவர் Charline Chaltin (19). இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆன்லைன் மூலம் நட்பானார்கள்.
அதாவது பேஸ்புக்கில் உள்ள ஒரு பக்கத்தில் இருவரும் சில பதிவுகளை ஒன்றாக போட்டனர். பின்னர் Charline இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்டுபிடித்த Jeremy அதில் அவருக்கு மெசேஜ் அனுப்பினார். அதற்கு Charline பதில் மெசேஜ் அளித்த நிலையில் தொடர்ந்து அவர்கள் பேச தொடங்கினார்கள்.
இது ஒரு கட்டத்தில் காதலாக மாறியது, தங்களுக்குள் 28 வயது வித்தியாசம் உள்ளதை அவர்கள் பொருட்படுத்தாமல் உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர். கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இருவரும் உடனடியாக சந்திக்க முடியவில்லை.
பயண கட்டுபாடுகள் சிறிது தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஜூன் 30ம் திகதி 8 நாள் பயணமாக பெல்ஜியம் சென்ற Jeremy தனது தேவதையான Charline-ஐ சந்தித்தார்.
இது குறித்து Charline கூறுகையில், நாங்கள் இருவரும் 3500 மைல்கள் தள்ளி இருந்தாலும் எங்கள் காதல் பலமாகவே உள்ளது. எங்களுக்குள் வயது வித்தியாசம் ஒரு பிரச்சினையே கிடையாது.
நான் பார்த்த சிறந்த மனிதர் Jeremy தான். என்னை விட இவ்வளவு வயது அதிகமான நபருடன் நான் காதலில் விழுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை.
நான் கல்லூரி படிப்பை அவருக்காக ஒத்தி வைக்க கூட தயாராக இருக்கிறேன், ஏனென்றால் எனக்கு Jeremy தான் முக்கியம், அவருக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் என கூறியுள்ளார்.
Jeremy கூறுகையில், நான் ஆசிரியராக பணியாற்றுகிறேன். இவ்வளவு இளம் மற்றும் தொலைதூரத்தில் உள்ள ஒருவருடன் நான் பொதுவாக டேட்டிங் செய்யமாட்டேன், ஆனால் Charlineயிடம் பழகிய ஒரு வாரத்திற்குள், எனக்குள் ஏதோ ஒரு உணர்வு மற்றும் உற்சாகம் ஏற்பட்டது என கூறியுள்ளார்.