சில ஆண்டுகளில் கடலுக்குள் விழுந்து விடும் அபாயம்! 3 கோடிக்கு ஆபத்தான வீடு வாங்கிய நபர்?
கடலுக்குள் இடிந்து விழும் ஆபத்து இருந்தும் ஆண் ஒருவர் 3 கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
3 கோடிக்கு கனவு வீடு
அமெரிக்காவில் மனிதர் ஒருவர் தனது கனவு வீட்டை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில், இன்னும் சில ஆண்டுகளில் கடலுக்குள் இடிந்து விழும் அபாயம் உள்ள வீட்டை ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.
மாசசூசெட்ஸ் கடற்கரைக்கு முன்னால் எப்படியாவது சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கொண்ட 59 வயது அமெரிக்கர் டேவிட் மூட்(David Moot) சுமார் $395,000 தொகைக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆனால் இவற்றில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இது கடலில் இருந்து 25 அடி தூரத்தில் மட்டுமே அமைந்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டு வரும் கடல் அரிப்பில் கடல் நீர் மட்டமானது ஆண்டு 3 அடிகள் முன் நகர்ந்து வரும் நிலையில், தோராயமாக இன்னும் ஒரு தசாப்தத்திற்குள் கடலுக்குள் வீடு விழுந்து விடும் அபாயம் உள்ளது.
இருப்பினும் “எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவதற்கு வாழ்க்கை மிகவும் குறுகியது”, “எப்படியும் இந்த வீடு கடலில் விழப்போகிறது, அது என் வாழ்நாளில் அல்லது அதன் பிறகாவும் கூட இருக்கலாம்” என தெரிவித்து மூட் தனது கனவு வீட்டை வாங்கியுள்ளார்.
Bloomberg அறிக்கைப்படி, 3 படுக்கையறை கொண்ட கடலோர வீடு 2022ம் ஆண்டு $1.195 தொகைக்கு விற்பனை இருந்தது, ஆனால் தற்போது கேட்கப்படும் விலைகளை விட மூட் 67% குறைவாக செலுத்தி வீட்டை ஏற்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |