காதலியை 50 முறை கத்தியால் குத்திக் கொன்று... அவரது 2 மகள்களை கடத்திய கொடூரன்: தண்டனை
அமெரிக்காவில் முன்னாள் காதலியை 50 முறை குத்திக் கொன்று அவரது இரண்டு மகள்களையும் கடத்திய குற்றத்தை டேனியல் கலிஹான் என்பவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
முன்னாள் காதலியை 50 முறை குத்திக் கொன்ற நபர்
டேனியல் கலிஹான் என்ற 37 வயது நபர் தனது முன்னாள் காதலி காலீ ப்ரூனெட்டை 50 க்கும் அதிகமான முறை கத்தியால் குத்திக் கொன்றதோடு அவரது இரண்டு சிறு வயது பெண் (6 மற்றும் 4 வயதுடைய சிறுமிகள்) குழந்தைகளையும் கடத்தியுள்ளார்.
Daniel Callihan
கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளையும் லூசியானாவிலிருந்து மிசிசிப்பிக்கு இடமாற்றிய கலிஹான், தன்னுடைய கூட்டாளி விக்டோரியா காக்ஸ் உடன் இணைந்து இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் துஷ்பிரயோக கொடுமையை செய்துள்ளார்.
ஆவணங்கள் வழங்கிய தகவல் படி, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 4 வயது சிறுமியை குற்றவாளி கலிஹான் நெஞ்சோடு வைத்து அணைத்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தை ஒப்புக் கொண்ட குற்றவாளிகள்
கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ப்ரூனெட்டின் கார் கலிஹானின் சொத்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்த 4 வயது சிறுமி புதைப்பட்ட சிறிய மண் குழிக்கு அருகே இருந்து 6 வயது சிறுமியை ஜூன் 13ம் திகதி பத்திரமாக மீட்டனர்.
Victoria Cox
இதையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டேனியல் கலிஹான் மற்றும் கூட்டாளி விக்டோரியா காக்ஸ் ஆகஸ்ட் மாதம் தங்களது குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளி டேனியல் கலிஹானுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டாளி விக்டோரியா காக்ஸ் தற்போது மாநில குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், மேலும் அவருக்கு விசாரணைக்கு முந்தைய சலுகை பேரம்(Plea Deal) வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |