ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவசர ஆலோசனை
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
நெதன்யாகு அவசர ஆலோசனை
ஈரான் - அமெரிக்கா இடையிலான உறவு மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா விரைவில் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் திட்டம் குறித்தும், நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டமானது ரகசியமாகவும், இதில் ஈரானுக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளின் கருத்துப்படி, ஈரானில் ஆட்சியை வீழ்த்த சிறிய அளவிலான தாக்குதல் போதாது என்றும், அமெரிக்காவின் தலையீடு இருந்தால் ஈரானின் அணுசக்தி மையங்கள், ஏவுகணை கட்டமைப்புகள் ஆகியவற்றை குறித்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பதில் தாக்குதலுக்கு தயார்
அமெரிக்கா ஒருவேளை ஈரானை தாக்கினால், ஈரான் நிச்சயமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலிய ராணுவம் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
டிரம்பின் எச்சரிக்கையை பிரதிபலிக்கும் விதமாக இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை பேசிய இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ஈரான் இஸ்ரேலை தாக்கினால், அவர்கள் எதிர்பாராத அளவிலான மிகப்பெரிய பதிலடி தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |