ஆக்ஸ்போர்டு பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய டீன் ஏஜ் சிறுவன்: நீதிமன்றம் விதித்த அதிகபட்ச தண்டனை
ஆக்ஸ்போர்டு பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய 17 வயது டீன் ஏஜ் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்திய சிறுவன்
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் Michigan பகுதியில் உள்ள ஆக்ஸ்போர்டு பள்ளியில் 17 வயது டீன் ஏஜ் சிறுவன் ஈதன் க்ரம்ப்ளே(Ethan Crumbley) துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 7 பேர் வரை காயமடைந்தனர். இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் துப்பாக்கி சூடு நடத்திய போது சிறுவன் ஈதன் க்ரம்ப்ளே-வுக்கு 15 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
AP
ஆயுள் தண்டனை
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8ம் திகதி) இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் வந்த நிலையில், 17 வயது டீன் ஏஜ் சிறுவன் ஈதன் க்ரம்ப்ளே-வுக்கு பரோல் வழங்கப்படாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் ஈதனின் மனநல பிரச்சனைகளை புறம் தள்ளிவிட்டு துப்பாக்கியை பரிசாக வழங்கிய அவரது பெற்றோருக்கும் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
michigan, Oxford, school, Ethan crumbley