போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கா தாக்குதல்: கொலம்பிய கிளர்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி
போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய கொலம்பிய கிளர்ச்சியாளர்கள் படகின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவம் தாக்குதல்
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை தடுப்பதற்காக தென் அமெரிக்க கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தெற்கு கட்டளை இராணுவ பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட கொலம்பிய கிளர்ச்சியாளர்கள் படையின் படகு மீது வெள்ளிக்கிழமை அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் கொலம்பியாவின் இடதுசாரி கெரில்லா கும்பலான தேசிய விடுதலை இராணுவத்துடன் தொடர்புடைய படகு மீது நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அமெரிக்க ராணுவத்தின் இந்த தாக்குதலில் படகில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கரீபியன் கடலில் பயணித்த போதைப்பொருள் நீர்மூழ்கி கப்பலை அமெரிக்கா வெற்றிகரமாக அழித்து இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |