2 மணி நேரம் இடைவிடாமல் வான்வழித் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா
ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்
ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை பீடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விடாமல் தீவிர தாக்குதல் நடத்தி முடித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம்(CENTCOM) தெரிவித்துள்ளது.
CENTCOM வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய வியூக மையங்கள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய கடல்சார் பாதுகாப்பு திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கான பின்னணி
செவ்வாய்க்கிழமை அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்பு திறன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளுக்கு எந்தவொரு சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரானிய படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தடுத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதியுடன் இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |