உக்ரைன் விற்பனைக்கு அல்ல... டொனால்டு ட்ரம்புக்கு ஜெலென்ஸ்கி பதிலடி
ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் போரில் இதுவரையான அமெரிக்க உதவிகளுக்கு ஈடாக 500 பில்லியன் டொலர் கனிம வளங்களை டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கோருவதாக ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் கோபம்
ஆனால் குறித்த கோரிக்கைகளை தாம் நிராகரித்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே ஜனாதிபதி ட்ரம்ப் கோபமடைந்திருக்கலாம் என்றும் ஜெலென்ஸ்கி தரப்பு நம்புகிறது.
மேலும், அமெரிக்கா குறிப்பிட்டுள்ள தொகையில் பாதி அளவு கூட உதவியது இல்லை என்றும், கனிம வளங்களுக்கு ஈடாக பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் மறுத்து வருவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஆயுத உதவியாக 67 பில்லியன் டொலரும் பிற உதவியாக 31.5 பில்லியன் டொலர் தொகையும் மட்டுமே இந்த மூன்றாண்டுகளில் அமெரிக்கா செலவிட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி விளக்கமளித்துள்ளார்.
விற்பனைக்கு அல்ல
மட்டுமின்றி, இதுவரை ரஷ்யாவுக்கு எதிரான போரில் 320 பில்லியன் செலவாகியுள்ளது என்றும் அதில் 120 பில்லியன் டொலர் உக்ரைன் பணம் என்றும் எஞ்சிய தொகை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், 500 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளதாகவும் அதற்கு ஈடாக 500 பில்லியன் டொலர் மதிப்பிலான கனிம வளங்களை கோருவதும் முறையல்ல என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் 500 பில்லியன் டொலர் மதிப்பிலான கனிம வளங்களை சொந்தமாக்கும் ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா முன்வைத்ததாகவும், ஆனால் அதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனை பாதுகாப்பது தமது பொறுப்பு என்றும் , உக்ரைன் ஒருபோதும் விற்பனைக்கு அல்ல என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |