டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் வெளியீடு
US Mint Release $1 Coin Featuring Trump: டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்
அமெரிக்காவின் 250 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாணய அச்சு நிறுவனம்(US Mint), புதிய தங்க நிற முலாம் பூசப்பட்ட இந்த டொலர் நாணய விற்பனையை தொடங்கியுள்ளது.

இந்த புதிய நாணயத்தின் முன்பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உருவப்படமானது பொறிக்கப்பட்டுள்ளது.
புதிய நாணயத்தின் தோற்றம்
நாணயத்தின் ஹெட்ஸ்(Heads) என்று அழைக்கப்படும் முன் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் முகத்திற்கு மேலே LIBERTY என்ற வார்த்தையும், அதன் கீழே 1776 -2026 என்ற ஆண்டு விவரமும் பொறிக்கப்பட்டுள்ளது.
Available for purchase today at 12PM ET: 2026 President Donald J. Trump $1 Coin. These coins are also in circulation, so check your pocket change. Collect them today! #CoinCollecting #America250https://t.co/g4eJes21ER pic.twitter.com/4OqkQ2sa9W
— United States Mint (@usmint) September 2, 2026
டெயில்ஸ்(Tails) என்று அழைக்கப்படும் பின் பக்கத்தில் அமெரிக்காவின் பெருமைமிகு முத்திரை(Great Seal) பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நாணயத்திற்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிரம்பால் நியமிக்கப்பட்ட கலை ஆணையம் ஒப்புதல் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தன்னுடைய உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் என்ற யோசனை வித்தியாசமான ஒன்று எனவும், இருப்பினும் இது தன்னை பெருமை கொள்ள வைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |