அமெரிக்காவில் பல வாகன விபத்தை ஏற்படுத்திய இந்தியர்: சட்டவிரோதமாக குடியேறியது அம்பலம்
அமெரிக்காவில் பேரழிவுகரமான விபத்தை ஏற்படுத்திய இந்தியர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரமான சாலை விபத்து
கலிஃபோர்னியாவில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த மிகப்பெரிய வாகன விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் இந்தியர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பிரதாப் சிங் என்ற இந்தியர், 18 சக்கர டிரக்கை கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டிச் சென்று பல கார்களில் மோதியதில் 5 வயது சிறுமி உட்பட பலர் படுகாயமடைந்தனர்.
இதில் 5 வயது சிறுமி தலிலா கோல்மன் என்ற அந்த சிறுமிக்கு வாழ்நாள் காயங்கள் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சட்டவிரோத குடியேற்றம்
இந்நிலையில், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இந்தியர் பிரதாப் சிங், 2022ம் ஆண்டு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் தற்போது சரியான குடிவரவு ஆவணங்கள் இல்லாததால் அவர் ICE காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் பிரதாப் சிங்கிற்கு கலிபோர்னியா மோட்டார் வாகன துறை வணிக ஓட்டுநர் உரிமம் வழங்கி இருப்பது நிலைமை சிக்கலாக்கி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |