காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய்: மொட்டை தலையுடன் மீட்கப்பட்ட மகள்
அமெரிக்காவில் ஆஷ்லே ரோலண்ட் என்ற தாய் தனது சொந்த மகனை கொன்று தரை பலகைக்கு அடியில் மறைத்ததுடன் மட்டுமல்லாமல், மகளின் தலைமுடியை அகற்றி கொடுமைக்கு உள்ளாக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொட்டை தலையுடன் மீட்கப்பட்ட சிறுமி
அமெரிக்காவின் ஆர்கன்சாலில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, ஊட்டச் சத்து குறைபாடு உள்ள சிறுமி ஒருவர் மொட்டை தலையுடனும், உடல் முழுவதும் பல தீ காயங்களுடனும் அவருடைய பாட்டியால் மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சிறுமியின் சகோதரனை, தாயார் ஆஷ்லே ரோலண்ட் (28) மற்றும் அவருடைய காதலன் நேதன் பிரிட்ஜஸ் (33) ஆகிய இருவரும் இணைந்து கொன்று தரை பலகைகளுக்கு அடியில் மறைத்து வைத்ததாக நம்பப்படுகிறது.
Gran Karen McGee Roland-கிரான் கரேன் மெக்கீ ரோலண்ட் (Gofundme)
இந்நிலையில் தனது பேத்தியை அழைத்து செல்ல கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்த அவரது பாட்டி, சிறுமியின் கோலத்தைக் கண்டு, பொலிஸார் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தேடுதல் வேட்டை நடத்தியதில், ஆறு வயதுச் சிறுவன் சடலம் மூன்று மாதங்களுக்கும் மேலாக வீட்டினுள் வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் மாநில மருத்துவ பரிசோதகர் இறப்பிற்கான காரணத்தையும், மரணத்தின் முறையும் தீர்மானிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
கிரான் கரேன் மெக்கீ ரோலண்ட் என்ற அந்த சிறுமி மீட்கப்பட்ட போது, தலையில் முடி இல்லாமல், விலா எலும்புகள் உடைந்து இருந்ததை தொடர்ந்து, அவர் மெம்பிஸில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுமிக்கு உடலில் பலவிதமான தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்த நிலையில், மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு தற்போது அவை ஓரளவு குணமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்ற குழந்தையின் மீது பயங்கரத்தை வெளிப்படுத்திய தாய் மற்றும் அவரது காதலன் லீ கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.