24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம்
ஹார்முஸ் நீரிணையில் முதல் 24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடந்து செல்ல முடியவில்லை என அமெரிக்க மத்தய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களை குறிவைத்து கடற்படை முற்றுகையை ஆரம்பித்துள்ளது. இந்த முற்றுகை, ட்ரம்ப் நிர்ணயித்த காலக்கெடு முடிந்ததும் தொங்கப்பட்டது.
10,000-க்கும் மேற்ப்பட்ட கடற்படையினர், மாலுமிகள் மற்றும் விமானப் படையினர், 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் டசின் கணக்கான விமங்களுடன் இந்த முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரான் துறைமுகங்களை நோக்கி வரும் அனைத்து நாடுகளின் கப்பல்களும் தடுக்கப்படுவதாகவும், ஆனால், ஈரானுடன் தொடர்பில்லாதா துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முதல் நாளில் 6 வணிக கப்பகல்கள் அமெரிக்காவின் உத்தரவின்படி திரும்பி சென்றதாகவும், ஈரானின் கடல்சார் வர்த்தகம் முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் பொருளாதாரத்தில் 90 சதவீதம் கடல் சார்ந்த வர்த்தகத்திலிருந்து வருவதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்கா USS Abraham Lincoln போன்ற விமானம் தாங்கி போர்கப்பகல்கள் மற்றும் Guided-Missile Destroyer கப்பல்களைப் பயன்படுத்தி முற்றுகையை வலுப்படுத்தியுள்ளது.
ஆனால் சட்டரீதியான சிக்கல்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா, 40-க்கும் மேற்பட்ட நாடுகளை இணைத்து பாரிஸில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்த முற்றுகை, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை குறைக்கும் பொருளாதார அழுத்தமாகக் கருதப்படுகிறது. ஆனால், இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |