வெனிசுலாவில் இருந்து தப்பிய எண்ணெய் கப்பல்கள்: வேட்டையாடத் தொடங்கிய அமெரிக்க கடற்படை
ட்ரம்ப் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்ட ஒரு டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் வெனிசுலாவில் இருந்து தப்பியுள்ள நிலையில், தற்போது அமெரிக்க கடற்படை வேட்டையாடத் தொடங்கியுள்ளது.
16 எண்ணெய் கப்பல்கள்
கடந்த மாதம், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, வெனிசுலாவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் தடைகளுக்கு உட்படுத்தப்பட்ட எண்ணெய் கப்பல்களை முடக்க உத்தரவிட்டதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

ட்ரம்பின் அந்த முடிவை வெனிசுலா நிர்வாகம் அப்போது கடற்கொள்ளை என்றே விமர்சித்திருந்தது. இந்த நிலையில், மதுரோ கைது செய்யப்படும் நாளில், இரவோடு இரவாக ட்ரம்பின் இரும்புக்கரத்தை உடைத்துக்கொண்டு 16 எண்ணெய் கப்பல்கள் வெனிசுலாவை விட்டு மிக ரகசியமாக வெளியேறியது.
அதில் ஒரு கப்பலை மட்டுமே அமெரிக்க கடற்படை புதன்கிழமை கைப்பற்றியுள்ளது. எஞ்சிய எண்ணெய் கப்பல்களை வேட்டையாடும் வேலையை அமெரிக்க கடற்படை தற்போது தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு கப்பல் அமெரிக்காவிடம் சிக்காமல் இருக்க தனது கொடியை ரஷ்யாவுக்கு சொந்தமானது என மாற்றியுள்ளது. இன்னொரு மூன்று கப்பல்கள் ரஷ்யர்களுக்கு சொந்தமானது என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய கப்பல்கள் அனைத்தும் தாங்கள் பயணப்படும் பகுதி குறித்து தவறான தரவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் நான்கு கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் கிழக்கு நோக்கிச் செல்வது உறுதி செய்யப்பட்டது.
ரஷ்ய கொடியுடன் கூடிய
மற்ற ஐந்து கப்பல்கள் இந்த வார தொடக்கத்தில் கரீபியன் கடல் வழியாகப் பயணித்தன. மீதமுள்ள ஒரு எண்ணெய் கப்பல் கொலம்பியாவின் கடற்பகுதியில் காணப்பட்டது, எஞ்சியுள்ள ஐந்து கப்பல்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

புதன்கிழமை, வெனிசுலா எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய ரஷ்ய கொடியுடன் கூடிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது உறுதி செய்யப்பட்டது.
அட்லாண்டிக் பெருங்கடல் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலான நீண்ட தேடலுக்குப் பிறகு ஒரு கப்பல் சிக்கியது. ஆனால், ரஷ்யா தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அரசியல் தலைவர்கள் சிலர் அணு ஆயுதத் தாக்குதலுக்கும் கோரிக்கை விடுத்தனர்.
ரஷ்ய கொடியுடன் எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது விளாடிமிர் புடினுக்கு அவமானமாகவே பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |