அமெரிக்க பசிபிக் கடற்கரை பகுதிக்கு விஞ்ஞானிகள் விடுத்த மிக மோசமான எச்சரிக்கை
அமெரிக்க பசிபிக் கடற்கரையின் சில பகுதிகளைத் தாக்கக்கூடிய பேரழிவு தரும் மிக மோசமான சுனாமி எச்சரிக்கையை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
8.0 அல்லது அதற்கு மேல்
காஸ்கேடியா துணை மண்டலத்தில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் தூண்டப்பட்டு இந்த சுனாமி ஏற்படும் என்றே விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த காஸ்கேடியா துணை மண்டலமானது வடக்கு கலிபோர்னியாவிலிருந்து கனடாவின் வான்கூவர் தீவு வரை பரவிக் கிடக்கிறது.
வர்ஜீனியா தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அடுத்த 50 ஆண்டுகளுக்குள் காஸ்கேடியா துணை மண்டலத்தில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட 15 சதவீதமே வாய்ப்பு உள்ளது.
அப்படி ஒரு மோசமான நிலநடுக்கம் ஏற்படும் என்றால், கடலோர நிலத்தை திடீரென 6.5 அடி வரை மூழ்கடித்து, வெள்ளப்பெருக்கை எதிர்பாராத வகையில் விரிவுபடுத்தி, நூற்றுக்கணக்கான அடி உயர சுனாமி அலைகளை உருவாக்கும்.
மேற்கு கடற்கரையில் உள்ள மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள், முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இதுவரையில்லாத பேரழிவை ஏற்படுத்தும்.
ஜப்பான் வரை பதிவான சுனாமி
ஒரு பெரிய பூகம்பத்தின் போது, கடலோரப் பகுதிகள் திடீரென நிலச்சரிவை சந்திக்க நேரிடும். இந்த நகர்வு பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி கரையோரங்களை மொத்தமாக அழிக்கக் கூடும்.
இந்தப் பிளவுப் பகுதியில் கடைசியாக ஏற்பட்ட பெரிய பூகம்பம் 1700 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது, இது ஜப்பான் வரை பதிவான சுனாமியைத் தூண்டியுள்ளது. தற்போது ஏற்படக் கூடிய மிக மோசமான சுனாமியானது தெற்கு வாஷிங்டன், வடக்கு ஓரிகான் மற்றும் வடக்கு கலிபோர்னியா ஆகிய பகுதிகளை பேழிவிற்கு உள்ளாக்கும்.
காஸ்கேடியா துணை மண்டல நிலநடுக்கமானது 1,000 அடி உயரம் வரை அலைகள் எழுப்பும் மிகப் பெரிய சுனாமியை உருவாக்கக்கூடும். இதனால், சியாட்டில், போர்ட்லேண்ட் உள்ளிட்ட கடலோர நகரங்கள் மற்றும் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள நகரங்கள் சில நிமிடங்களில் நீரில் மூழ்கக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |