பிரான்சில் தங்கி கல்வி கற்றுவந்த வெளிநாட்டு இளைஞர் மாயம்: கவலையில் பெற்றோர்
பிரான்ஸ் நாட்டில் தங்கி, கல்விகற்றுவந்த அமெரிக்க இளைஞர் மாயமான விடயம் அவரது பெற்றோரை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
வெளிநாட்டுக் கல்வித் திட்டத்தில் பயின்றுவந்த மாணவர்
கென் (Ken DeLand Jr, 27) என்னும் அமெரிக்க இளைஞர், வெளிநாட்டுக் கல்வித்திட்டம் ஒன்றின்கீழ் பிரான்சில் தங்கி கல்வி பயின்றுவந்துள்ளார்.
தவறாமல் பெற்றோரை தொடர்புகொள்ளும் மகன்
தங்கள்
மகன் சுற்றுப்பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவர் என்று கூறியுள்ள கென்னுடைய பெற்றோர், ஆனால்,அவர் எங்கு சென்றாலும், தங்களுடன் தொடர்பிலேயே இருப்பார் என்று கூறுகின்றனர்.
ஆனால், இம்முறை, கடந்த மாதம் 27ஆம் திகதி கென் தான் தங்கியிருந்த வீட்டை விட்டு Valence என்ற இடத்துக்குச் செல்லும் ரயிலில் ஏறியுள்ளார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்கிறார் அவரது தந்தை.
@News 8 WROC YouTube.com
பிரான்ஸ் அதிகாரிகள் கென்னை தேடி வரும் நிலையில், அவரது பெற்றோர் தங்கள் மகனுக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.