கடவுசீட்டு தரவரிசை - பாரிய சரிவை சந்தித்த அமெரிக்கா
கடவுசீட்டு தரவரிசையில் அமெரிக்கா பாரிய சரிவை சந்தித்துள்ளது.
கடவுசீட்டு தரவரிசையில் அமெரிக்கா சரிவு
எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாத அணுகல்கள் அல்லது அங்கே சென்று விசா பெறும் வசதி வழங்கப்படுகிறது என்ற பயண சுதந்திரத்தின் அடிப்படையில் Henley Passport Index வெளியிடப்படுகிறது.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் கடவுசீட்டு பாரிய சரிவை சந்தித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் 4வது இடத்திலிருந்த அமெரிக்கா, தற்போது 10வது இடத்திற்கு சரிந்துள்ளது. அமெரிக்காவை விட 30க்கும் மேற்பட்ட நாடுகள் அதிக பயண சுதந்திரத்தை வழங்குகின்றன.
உலகெங்கும் மாறிவரும் விசா கொள்கை, புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இராஜதந்திர ஏற்பாடுகள் மூலம் பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு விசா இல்லா அணுகலை எவ்வாறு விரிவுபடுத்தியதன் மூலம் அமெரிக்காவிற்கு இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா கடவுசீட்டு மூலம், 180 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெறலாம்.
இதில், 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்று சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகளும் 188 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்று 2வது இடத்தில் உள்ளன.
இதில், 55 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்று இந்தியா 81வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 85 இடத்திலிருந்தாலும், 57 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்றிருந்தது.

39 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்று இலங்கை 94வது இடத்தில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |