பிலடெல்பியாவில் மிகப்பெரிய துப்பாக்கி சூடு: 12 பேர் வரை உயிரிழப்பு
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் துப்பாக்கி சூடு.
12 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை. பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றுக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிலடெல்பியா மாகாணத்தின் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு வெளியே மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அத்துமீறலுக்கு காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கூடுதல் செய்திகளுக்கு; டி20 உலக கோப்பையின் லீக் போட்டிகள் நிறைவு…அரையிறுதிக்குள் நுழைந்த அணிகள் யாவை?
இதற்கு முன் வடக்கு கரோலினா பகுதியில் ராலே என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூடு வன்முறை சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.