ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா
US Plan to Use Laser Tech Against Iran Drones: ஹார்முஸ் ஜலசந்தியில் லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கி அமெரிக்கா சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் குவியும் ஆயுதங்கள்
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தீவிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
ஈரானும் ஹார்முஸில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கா கப்பல்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஈரானின் இந்த வான்வழி மற்றும் கடல்வழி அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள அமெரிக்க படைகள் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது.
இதனால் அமெரிக்காவுக்கு போர் செலவுகள் அதிகரித்துள்ளது.
லேசர் தொழில்நுட்பத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா
போர் செலவுகள் அதிகரித்து வரும் காரணத்தினால், குறைந்த விலையில் அதிகமான திறனை வெளிப்படுத்தும் லேசர் தொழில்நுட்பத்தை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது.
ஈரானின் ட்ரோன்களை எதிர்கொள்ள சுமார் 5000 கோடி ரூபாய் செலவில் அமெரிக்கா புதிய லேசர் தொழில்நுட்பத்தை தயாரித்துள்ளது.

இந்த லேசர் தொழில்நுட்பம் ஜெனரேட்டர்கள் மற்றும் பற்றரிகளில் இருந்து ஆற்றலை பெற்று போட்டான்களாக மாற்றுகிறது. இந்த போட்டான்கள் இலக்கின் மேற்பரப்பில் ஒற்றை கற்றையாக குவிந்து வெடிக்கும் வரை வெப்பப்படுத்துகிறது.
அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தை மெக்சிகன் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. ஆனால் மனித இலக்குகள் மீது இதுவரை பயன்படுத்தியது இல்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.