ஈரான் தொடர்பு கப்பல்களைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டம்: அடுத்த கட்டத்திற்கு நகரும் மோதல்
வரும் நாட்களில், சர்வதேச கடல் பரப்பில் ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களை முற்றுகையிட்டு, அவற்றைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளது.
பொருளாதார அழுத்தம்
இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கக் கடற்படையானது தனது முற்றுகையை மத்திய கிழக்குக்கு அப்பாலும் விரிவுபடுத்திக்கொள்ள அது வழிவகுக்கும் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை, ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவதையும், ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றே அமெரிக்க அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானுக்கு எதிரான இந்த நடவடிக்கை விரிவுபடுத்துவது, பாரசீக வளைகுடாவுக்கு வெளியே உள்ளவை உட்பட, உலகம் முழுவதும் ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களின் கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசப்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான நிலைப்பாடு
தற்போது நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளில் ஹார்முஸ் நீரிணை ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையற்ற போர் நிறுத்தம் காலாவதியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஈரான் தனது துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டதைக் காரணம் காட்டி, நீரிணையை மூடுவதாக சமீபத்தில் அறிவித்தது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தங்களை மிரட்ட முடியாது என்றும், கடுமையான நிலைப்பாடு எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறி, ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |