இந்தியா, சீனா உட்பட 60 நாடுகளுக்கு புதிய வரி விதிக்க அமெரிக்கா திட்டம்
இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய 60 நாடுகளுக்கு புதிய வரியைவிதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்ட வெளியிட்ட அறிவிப்பின்படி, கட்டாய தொழிலாளர் (Forced labour) தொடர்பான விதிகளை சரியாக அமுல்படுத்தாத நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது.
US Trade Act of 1974-ன் Section 301 சட்டத்தின் கீழ் இந்த வரியை அமெரிக்க அரசு முன்மொழித்துள்ளது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் சீனாவிற்கு வரி விதித்திருந்தார்.
USTR அறிக்கையில், இந்தியா மற்றும் சீனா கட்டாய தஸ்ஒய்லாளர் தொடர்பான இறக்குமதி தடையை சட்டரீதியாக அமுல்படுத்தவில்லை என்றும், அமெரிக்க வர்த்தகத்திற்கு தடையாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 சதவீத வரி
கட்டாய தொழிலாளர் பொருட்களுக்கு பகுதி தடையை அமுல்படுத்திய நாடுகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது.
12.5 சதவீத வரி
எந்த தடையும் அமுல்படுத்தாத நாடுகளுக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
இது இன்னும் பரிசீலனையில் உள்ள முன்மொழிவு மட்டுமே. ஆனால், நடைமுறைக்கு வந்தால், உலகளாவிய வர்த்தகத்தில்புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |