ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா நடத்தும் தீவிர ஆலோசனை
ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அணு ஆயுதம்
ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட கருத்தில், அமெரிக்கா இனி வெளிநாட்டு போர்களில் ஈடுபடாது என்று டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்து இருப்பதாகவும், ஆனால் ஈரான் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான வரம்பை அவரது அரசு நிர்வாகம் குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை வழங்கும் அறிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக இஸ்ரேல் அளிக்கும் எச்சரிக்கைகளை கேட்டு மட்டுமே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன், அது மிகப்பெரிய உலகப் போராக மாறி தாங்க முடியாத பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |