அமெரிக்காவின் மிகச் சிறந்த கூட்டாளி இஸ்ரேல்: ட்ரூத் சோஷியலில் டிரம்ப் கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலிய மக்களுக்கு பாராட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில், இஸ்ரேலிய மக்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இஸ்ரேலிய மக்கள் அமெரிக்காவுக்கு சிறந்த கூட்டாளிகள் என்று நிரூபித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இஸ்ரேலியர்கள் தைரியமானவர்கள், புத்திசாலிகள் மற்றும் விசுவாசமானவர்கள் என குறிப்பிட்டுள்ள டிரம்ப் மோதல்கள் மற்றும் அழுத்தம் நிறைந்த நேரத்தில் உண்மையான நிறத்தை காட்டிய மற்றவர்களை போல் அல்லாமல் இஸ்ரேல் உறுதியாக உடன் நிற்பதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இஸ்ரேலுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்று தெரியும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்தானது, ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம் இரண்டாவது வாரத்தை நெருங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |