ட்ரம்பின் 1.8 பில்லியன் டொலர் நிதியும் செயலிழந்துவிட்டது
MAGA கூட்டாளிகளுக்காக டொனால்ட் ட்ரம்ப் வைத்திருந்த 1.8 பில்லியன் டொலர் நிதி செயலிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் தொடர்ந்த வழக்கு
2020ஆம் ஆண்டில் தனது வரிப் பதிவுகள் செய்தித்தாள்களுக்குக் கசிந்தது தொடர்பாக, IRS மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார்.

ஜனவரி மாதம் அவர் வழக்கு தொடர்ந்த நிலையில், அவரது சொந்த நிர்வாகத்துடன் ஏற்படுத்தப்பட்ட சமரச ஒப்பந்தம், 'சட்டப் போர் எதிர்ப்பு' நிதியை உருவாக்கியது.
அத்துடன் அந்த உத்தரவுக்கு முன்பு செய்யப்பட்ட எந்தவொரு வரித் தாக்கல் மீதான தணிக்கைகளில் இருந்தும் அவருக்கு பாதுகாப்பு வழங்கியது.
பின்னர் மே 19ஆம் திகதி அன்று, Blanche கையெழுத்திட்ட இந்த உத்தரவு, அதன் நோக்கத்திலும், வடிவத்திலும் முன்னெப்போதும் இல்லாதது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் நீதித்துறையில் இந்த வரி முன்மொழிவு முதன்முதலில் விவாதிக்கப்பட்டபோது, ஜனாதிபதி அல்லது அவரது உதவியாளர்களின் உத்தரவின் பேரில் தணிக்கைகளைக் கைவிடுவதில் இருந்து IRS-ஐ தடுக்கும் ஒரு சட்டத்தால், இந்த உத்தரவு முடக்கப்படுமா என்பது குறித்து வழக்கறிஞர்கள் கவலை எழுப்பியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

1.8 பில்லியன் டொலர் நிதி
இந்த நிலையில், குடியரசுக் கட்சியினரின் கடும் எதிர்ப்பு, வெள்ளை மாளிகையின் முடிவை அவமானகரமான முறையில் மாற்றியமைக்கக் கட்டாயப்படுத்தியதால், வழக்குத் தொடரப்பட்ட MAGA கூட்டாளிகளுக்காக டொனால்ட் ட்ரம்ப் வைத்திருந்த 1.8 பில்லியன் டொலர் நிதி செயலிழந்துவிட்டது என தெரிய வந்துள்ளது.
அதே சமயம், ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கிடைத்த மிகவும் மதிப்புமிக்க ஒரு சலுகை அமைதியாகத் தொடர்வதாக கூறப்படுகிறது.
செவ்வாயன்று, தற்காலிக தலைமை வழக்கறிஞரான டாட் பிளான்ச், 'டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மகன்களான டான் ஜூனியர், எரிக் மற்றும் அவர்களது வணிகங்களை வரி தணிக்கைகளில் இருந்து பாதுகாக்கும் IRS ஒப்பந்தத்தின் ஒரு பகுதி இன்னும் நடைமுறையில் உள்ளது' என்பதை உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில் ஜனநாயகக் கட்சியினர், எந்தவொரு சட்ட மசோதாவின் ஒரு பகுதியாக, 1.8 பில்லியன் டொலர் நிதி மற்றும் தணிக்கை விதி ஆகிய இரண்டிலும் திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |