1952-ல் அணிவகுத்த பறக்கும் தட்டுகள்: வீடியோ ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா
US Release 1952 Historic UFO Archive: பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிரம்பின் அதிரடி உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசிடம் உள்ள UFO தொடர்பான கோப்புகளை வெளியிடுமாறு நிர்வாக உத்தரவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்த உத்தரவின் கீழ் அமெரிக்க ராணுவத்தின் கட்டளை மையமான பென்டகன், UFO தொடர்பான வரலாற்று ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது.
இதுவரை 6 தொகுப்புகளாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக 6 தொகுப்பில் 1952ம் ஆண்டை சேர்ந்த பழமையான காட்சிகள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அணிவகுத்த பறக்கும் தட்டுகள்
1952 ம் ஆண்டை சேர்ந்த மேல் குறிப்பிட்ட காணொளி காட்சியை அமெரிக்க கடற்படை தலைமை வாரண்ட் அதிகாரி டெல்பெர்ட் சி. நியூஹவுஸ்(Delbert C. Newhouse) என்பவர் உட்டா(Utah) மாகாணத்தில் உள்ள ட்ரெமாண்டன்(Tremonton) அருகே பதிவு செய்துள்ளார்.
அதில் ஒளிரும் பறக்கும் தட்டுகள்(UFO) அணிவகுத்து செல்வது பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட சிறிது காலத்திற்குள் அந்த காட்சிகளானது 'ப்ராஜெக்ட் ப்ளூ புக்’(Project Blue Book) என்ற திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு விமானப்படையின் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ஆய்வு திட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த திட்டமானது 1952 முதல் 1969 வயது இயங்கி வந்த நிலையில், எடுக்கப்பட்ட வீடியோவின் தரம் மிகவும் மோசமானதாக இருந்ததாலும், அவற்றில் நிலையான அடையாள புள்ளிகள் இல்லாத காரணத்தினாலும் சம்பந்தப்பட்ட பொருளின் தன்மையை ஆய்வாளர்களால் உறுதி செய்ய. முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.