சோவியத் கால எண்ணெய் குழாயை பயன்படுத்த திட்டம்., அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி பேச்சுவார்த்தை
சோவியத் கால எண்ணெய் குழாய் வழியாக ரஷ்ய எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுவருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகள், ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிசக்தி விநியோகத்தை மீண்டும் தொடங்க ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The Bell பத்திரிகையின் தகவலின்படி, சோவியத் யுகத்தில் உருவாக்கப்பட்ட ட்ரூஸ்பா (Druzhba) எண்ணெய் குழாய் வழியாக எரிசக்தி வழங்குவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
பின்னணி
Nord Stream 2 குழாய் வழியாக ரஷ்ய இயற்கை எரிவாயுவை பால்டிக் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ரஷ்யா - உக்ரைன் போரினால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதோடு, அமெரிக்காவின் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன. இதன் மூலம், ஜேர்மனி Nord Stream 2 குழாய் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தியது.
ட்ரூஸ்பா குழாய் – மீண்டும் விவாதத்தில்
சோவியத் யுகத்தில் உருவாக்கப்பட்ட ட்ரூஸ்பா குழாய் உக்ரைன் வழியாக செல்லும் முக்கிய பாதையாக இருந்தது. 2022 வரை, இது பல ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகித்தது.
ஜேர்மனி 2022ல் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்தியது. ஆனால், ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் இன்னும் ட்ரூஸ்பா வழியாக எண்ணெய் பெற்றுவருகின்றன.
பேச்சுவார்த்தைகளின் முக்கிய அம்சங்கள்
- உக்ரைன் போருக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
- அமெரிக்கா, ரஷ்யா இருவரும் இதில் நன்மை அடைய, யூரோப்பிய நாடுகள் அதிக செலவு செய்ய நேரிடும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
- Nord Stream 2 குழாயின் சேதமில்லாத பகுதிகளை மீண்டும் செயல்படுத்துவதற்கும் அமெரிக்கா ஆர்வம் காட்டுகிறது.
- ஜேர்மனியில் ரஷ்யாவின் Rosneft எண்ணெய் நிறுவனத்தின் சொத்துகளை அமெரிக்க நிறுவனம் வாங்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யா-அமெரிக்கா இடையேயான மிகப் பாரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதே சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கணித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |