புதிய விதிகளை நீக்காவிட்டால்...ஆப்கானில் தங்களது நடவடிக்கையை தொடங்குவோம் என அமெரிக்கா எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளை தாலிபான்கள் திரும்ப பெறாவிட்டால் அமெரிக்கா சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ம் ஆண்டு ஆட்சியை இழந்த தாலிபான்கள் அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து மீண்டும் கடந்த 2021ம் ஆண்டு தலைநகர் காபூலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து முந்திய ஆட்சிகாலத்தில் தாலிபான்கள் விதித்த கொடூரமான கட்டுபாடுகளை மனதில் கொண்டு, லட்சக்கணக்கான பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேற போராடினர்.
இதையடுத்து, முந்தைய ஆட்சிகாலத்தில் விதித்த கட்டுபாடுகள் போன்ற எந்தவொரு கடுமையான கட்டுபாடுகளும் தற்போதைய ஆட்சிகாலத்தில் கடைபிடிக்கப்படாது என உத்திரவாதத்தை தாலிபான்கள் தெரிவித்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அப்போது பதற்றம் சற்று தணிந்தது.
இந்தநிலையில் தற்போது பெண்கள் மீதான கடுமையான கட்டுபாடுகளை தாலிபான் மீண்டும் விதிக்க தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் கண்களை தவிர்த்து உடல்களை மறைக்கும் புர்காவை கட்டாயமாக அணிய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காத பெண்களுக்கு தக்க தண்டணைகள் வழங்கப்படும் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர், இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆப்கானியர்கள் மத்தியில் பெரும் கோப அலைகளை எற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மீது விதித்த கட்டுபாடுகளை தற்போது மீண்டும் தாலிபான்கள் விதித்துள்ளது, இதனை தாலிபான்கள் திரும்ப பெறாவிட்டால் அமெரிக்கா தக்க நடவடிக்கைக்களை முன்னெடுக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தாலிபான்களுடன் நேரடியாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தாலிபான்கள் பெண்கள் மீதான கட்டுபாடுகளை திரும்ப பெறாவிட்டால், அமெரிக்கா அதன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உபகரணங்களை ஆப்கானிஸ்தானில் வைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிலிப்பைன்ஸ் தேர்தலில் அதிகரிக்கும் பரபரப்பு: தேர்தல் ஆணையத்தின் முன் மாணவர்கள் போராட்டம்
ஆனால் ஏத்தகைய உபகரணங்கள் மற்றும் ஏத்தகைய முன்னெடுப்புகள் என நெட் பிரைஸ் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.