பிலிப்பைன்ஸ் தேர்தலில் அதிகரிக்கும் பரபரப்பு: தேர்தல் ஆணையத்தின் முன் மாணவர்கள் போராட்டம்
பிலிப்பைன்ஸில் அமையவிருக்கும் மார்கோஸ் ஜுனியரின் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து அவரது எதிர்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸில் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மே 9ம் திகதியான நேற்று நடைப்பெற்றது, இதில் மார்கோஸ் ஜுனியர் (Ferdinand Marcos Jr.) அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன.
இந்தநிலையில், தற்போது வெளிவந்துள்ள அதிகாரப்பூர்வமற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், மார்கோஸ் ஜுனியர் 31 மில்லியன் வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட லெனி ராப்ரெட்டோவை(Leni Robredo) விட இருமடங்கு வாக்குகளைபெற்று முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னதாக அவரது தந்தை Ferdinand Marcos கடந்த 1965ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை பிலிப்பைன்ஸில் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்தார், இந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து மக்கள் சக்தி (people power) என்ற கூட்டமைப்பு எழுச்சிப்பெறவே அவரது ஆட்சி களைக்கபட்டு அவர் தனது குடும்பத்துடன் வேறு நாட்டிற்கு தப்பி சென்றார்.
இதையடுத்து 36 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகன் மார்கோஸ் ஜுனியர் ஆட்சியமைப்பதன் மூலம் மார்கோஸ் ஜுனியரின் குடும்பம் பிலிப்பைன்ஸில் ஆட்சி மீண்டும் அமைக்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மார்கோஸ் ஜுனியர் பேசியுள்ள கருத்தில், எங்களுடைய ஒற்றுமை செய்தியில் நம்பிக்கை வைத்து எங்களுடன் பங்களித்த தன்னார்வலர்கள், இணையான குழுக்கள், அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
மார்கோஸ் ஜுனியரின் இந்த தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பிலிப்பைன்ஸின் பங்குகள் 3 சதவிகிதம் வரை சரிந்துள்ளது மற்றும் பிலிப்பைன்ஸின் நாணய மதிப்பான peso அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 0.4 சதவிகிம் உயர்ந்துள்ளது.
இந்த பொருளாதார சரிவானது, மார்கோஸ் ஜுனியர் வெற்றிபெற போவதை தொடர்ந்து, அவரது கொள்கை முடிவுகள் எத்தகையது என தெரியாததால் முதலீட்டாளர்களின் பிலிப்பைன்ஸில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: மாற்றுத்திறனாளி சிறுவனை அனுமதிக்க மறுத்த விமான அதிகாரி: சகிப்புத்தன்மை கூடாது என அமைச்சர் கண்டனம்
மேலும் பிலிப்பைன்ஸில் அமையவிறுக்கும் மார்கோஸ் ஜுனியரின் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து அவரது எதிர்பாளர்கள் மற்றும் மாணவர்கள் நுற்றுக்கும் மேற்பட்டோர் தேர்தல் ஆணையத்தின் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.