அமெரிக்காவின் இரகசியம்... மரணமடையும் 9வது விஞ்ஞானியால் இறுகும் மர்மம்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் மர்ம மரணங்கள் மற்றும் மாயமானவர்களின் பட்டியலில் தற்போது அமெரிக்காவின் விண்வெளித் திட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு விஞ்ஞானியும் இணைந்துள்ளார்.
நாசாவின் JPL
நாசாவில் ஆய்வு விஞ்ஞானியாக செயல்பட்டு வந்த மைக்கேல் டேவிட் ஹிக்ஸ் என்பவரே தனது 59வது வயதில் மரணமடைந்துள்ளார். நாசாவின் JPL பிரிவில் 1998 முதல் 2022 வரையில் ஹிக்ஸ் பணியாற்றியுள்ளார்.

80-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டதுடன், வால்மீன்கள் மற்றும் சிறுகோள்களின் இயற்பியல் பண்புகளைப் புரிந்துகொள்ள நாசாவிற்கு உதவிய பல குழுக்களிலும் அங்கம் வகித்துள்ளார்.
குறிப்பாக நாசாவின் மிக முக்கியமான DART திட்டத்திலும் ஹிக்ஸ் பணியாற்றியுள்ளார். 2001-ல் ஒரு வால் நட்சத்திரத்தைக் கடந்து சென்ற புதிய விண்கலத் தொழில்நுட்பத்தைச் சோதித்த டீப் ஸ்பேஸ் 1 திட்டத்திலும் அவர் பணியாற்றியுள்ளார்.
இது திட்டமிடப்பட்ட சதி எனப் பகிரங்கமாக எந்தக் குற்றச்சாட்டுகளும் எழவில்லை என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் மரணமடைந்த அல்லது காணாமல் போன அமெரிக்க விண்வெளி அல்லது அணுசக்தித் திட்டங்களுடன் தொடர்புடைய பல விஞ்ஞானிகளில் ஹிக்ஸும் ஒருவர்.
மேலும், இந்த விஞ்ஞானிகளில் மூவர் JPL பிரிவில் பணிபுரிந்தனர் அல்லது ஹிக்ஸுடன் தொடர்புடைய நாசா திட்டங்களில் பங்கேற்றுள்ளனர். JPL பிரிவின் புதிய இயக்குநர், நாசா ஆய்வகத்தில் தனது பதவிக்காலத்தைத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2025-ல் எந்தத் தடயமும் இன்றி மாயமாகியுள்ளார்.
திடீரென்று மாயம்
JPL பிரிவில் பணியாறியுள்ள மேலும் இருவர் மிக சமீபத்தில் மரணமடைந்துள்ளனர். அதில் ஒருவர் ஹிக்ஸின் நீண்டகால சக ஊழியரான ஃபிராங்க் மைவால்ட். இவர் தமது 61வது வய்தில் கடந்த 2024 ஜூலை மாதம் மரணமடைந்துள்ளார்.
67 வயதான வானியற்பியலாளர் கார்ல் கிரில்மேர் தமது வீட்டு முற்றத்தில் கடந்த பிப்ரவரி 16 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். மைவால்ட் அல்லது ஹிக்ஸின் மரணங்கள் குறித்து நாசாவும் JPL பிரிவும் கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை.

மோனிகா ரெசா 2025 ஜூன் மாதம் கலிபோர்னியாவில் மலையேற்றம் சென்றபோது திடீரென்று மாயமானார். நாசாவின் JPL பிரிவில் இயக்குநராக ஆவதற்கு முன்பு, ரெசா மேம்பட்ட ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
முன்னாள் FBI உதவி இயக்குனர் கிறிஸ் ஸ்வெக்கர் சமீபத்தில் தெரிவிக்கையில், அமெரிக்காவின் எதிரிகள் மற்றும் நேச நாடுகள் உட்பட பல்வேறு வெளிநாட்டு உளவு அமைப்புகள், பல தசாப்தங்களாக அமெரிக்காவின் தொழில்நுட்ப இரகசியங்களைக் கொண்டுள்ள அமெரிக்கர்களைக் குறிவைத்து வந்துள்ளன.
சீனா, ரஷ்யா மட்டுமின்றி நமது நண்பு நாடுகளான பாகிஸ்தான், இந்தியா, ஈரான், வட கொரியா போன்ற சில நாடுகளும் கூட இந்த வகையான தொழில்நுட்பத்தைக் குறிவைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |