வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல்
வெனிசுலா கடற்கரைக்கு அருகே பெரிய எண்ணெய் கப்பல் ஒன்றை கைப்பற்றி அந்நாட்டின் நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு அமெரிக்கா நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா-வெனிசுலா மோதல்
அமெரிக்காவிற்குள் அதிக அளவு போதைப்பொருள் வெனிசுலாவில் இருந்து கடத்தப்படுவதாக கூறி வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) அரசாங்கத்திற்கு எதிராக டிரம்ப் அரசாங்கம் தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.
❗️MOMENT US seizes oil tanker off coast of Venezuela
— MagaDet17 (@MagaDet17) December 10, 2025
Coast Guard rappel down off Black Hawks, STORM bridge
AG Bondi claims vessel 'transported sanctioned oil from Venezuela and Iran'
Seizure 'conducted safely and securely'@MTodayNews pic.twitter.com/hbET4uyMWQ
அதே சமயம் சீனாவின் முதன்மை எண்ணெய் ஏற்றுமதியாளராகவும், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடாகவும் கருதப்படும் வெனிசுலாவின் வளங்களை அமெரிக்கா திருடப் பார்ப்பதாக வெனிசுலா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.
எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா
இந்நிலையில் வெனிசுலா கடற்கரைக்கு அருகே பெரிய எண்ணெய் கப்பல் ஒன்றை சிறைப்பிடித்து இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “நாங்கள் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளோம், இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப்பெரிய கப்பல் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பல், வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்ட எண்ணெய்களை கொண்ட சென்ற கச்சா எண்ணெய் கப்பல் என்று குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா கண்டனம்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து வெனிசுலா உடனடியாக கண்டனங்களை தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கம், அமெரிக்காவின் இந்த செயலை சர்வதேச கடற்கொள்ளை என்று குற்றம்சாட்டியுள்ளது.
வெனிசுலா அந்நிய தலையீட்டை தொடர்ந்து எதிர்க்கும் என்றும், அமெரிக்கா ஒருநாளும் எண்ணெய் காலனியாக மாறாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |